ருசியான வெஜ் தால் சூப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசி அபாரமாக இருக்கும்!

Summary: குழந்தைகளுக்கான வெஜ் தால் சூப் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.சாதத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீஎங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 கேரட்
  • 1 பீட்ரூட்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் மிளகு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து காய்கறிகளை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  3. அடுத்து துவரம் பருப்பை தேங்காய் எண்ணெய் சேர்த்து மலர வேக விடவும்.
  4. வெந்ததும் அதில் காய்கறிகளை சேர்க்கவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் அதில் சீரகம், மிளகு உடைத்து போடவும்.
  5. பிறகு காய்கறிகளை மட்டும் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்
  6. அதை மீண்டும் வேக வைத்த நீரில் கலந்து உப்பு சேர்த்து வடிகட்டி லேசாக சூடு செய்யவும்.
  7. பச்சிளம் குழந்தைகளுக்கான வெஜ் தால் சூப் ரெடி.