மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?

Summary: நாம் பள்ளி படிக்கும்போது இருந்தே வீட்டில் கொடுக்கும் 50 பைசா 25 பைசாக்கு நாம் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் இதுவும் ஒன்று. இந்த மசாலா தட்டையை நாம் மாலை நேரங்களில் குடிக்கும் டீ மற்றும் காபி உடன் சாப்பிடும்போது அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். இப்படி நம் சிறுவயது நினைவுகளின் சுவையை கூட்டிய இந்த மசாலா தட்டையை எளிமையான முறையில் நம் வீடுகளில் நாமே செய்து சாப்பிடலாம் நாம். இன்று இந்த மசாலா தட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 4 பல் பூண்டு
  • 1 tbsp மிளகு
  • 1 tbsp சீரகம்
  • 2 tbsp கடலை பருப்பு
  • 1 கப் அரிசி மாவு
  • 1 tbsp பொட்டுகடலை
  • ¾ tbsp மிளகாய் தூள்
  • 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp சூடான எண்ணெய்
  • உப்பு
  • எண்ணெய்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் தட்டை செய்வதற்கு இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பை சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சேர்த்து மாவாக அரைத்து தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு அதை மிக்ஸி ஜாரில் நான்கு பல் பூண்டு, ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பையும் இதனுடன் சேர்த்து அதிகமாக அரைக்க கூடாது.
  3. ஒரே ஒரு சுத்து மட்டும் சுத்த விட வேண்டும் கடலை பருப்பு பாதி பாதியாக உடைந்து இருந்தால் அது போதுமானது இருக்கும். பின்பு ஒரு பெரிய பவுலில் ஒரு கப் அரிசி மாவு எடுத்துக் கொண்டு அதனுடன் நம் அரைத்து வைத்திருக்கும் பொட்டு கடலை மாவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்
  4. பின்பு முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் அரைத்த பொருள்களையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  5. அதன் பின் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை சூடு பண்ணி அதையும் இதோடு சேர்த்து கரண்டியை வைத்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள் பின்பு கடைசியாக சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தட்டை செய்வதற்கு ஏற்ற கெட்டியான பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளவும்.
  6. ஒரு பிளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் நன்றாக எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு அதில் ஒரு சிறிய உருண்டை தட்டை மாவை வைத்து பிளாஸ்டிக் தாளை மடித்து ஒரு வட்ட வடிவ பாத்திரத்தை வைத்து ஒரு அழுத்த அழுத்தவும்.
  7. பின்பு மாவு தட்டையாக மாறிய பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும். பின் நாம் தயார் செய்த தட்டையை எடுத்துக் எண்ணெயில் பொரியுங்கள். அவ்வளவுதான் மாலை நேரத்தை இனிமையாக்கும் மசாலா தட்டை தயாராகிவிட்டது.