குக் வித் கோமாளி ரெசிபி ருசியான பட்டர் சிக்கன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Summary: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கனைப் பிடிக்காதவர்களும், ருசிக்காதவர்களும் இருக்க முடியாது. அதற்கேற்றால் போல் சில்லி சிக்கன், சிக்கன் லாபிபப், பெப்பர் சிக்கன், உப்புக்கறி என சிக்கன் வகைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படி விதவிதாக எப்படி சிக்கனில் ரெசிபிகளை செய்துக்கொடுத்தாலும் மக்கள் விரும்பிச்சாப்பிட்டு வருகின்றனர். சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. ஆகவே பட்டர் சிக்கன் ரெசிபியை செய்து பார்க்கலாம்.

Ingredients:

  • 400 கிராம் சிக்கன்
  • 3/4 டேபிள் ஸ்பூன் காஷ்மீர்
  • 3/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பெரிய
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீர்
  • 10 முந்திரி
  • 3 தக்காளி
  • 2 காஷ்மீர் மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் தனியா
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 கப் தயிர்
  • 3 டேபிள் ஸ்பூன் கீரிம்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 வாணலி
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. சிக்கனில் தேவையான அளவு உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
  2. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, வர மிளகாய், முந்திரி, காஷ்மீர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை, தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
  4. பின் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
  5. அவை வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளவும்.
  6. பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை எண்ணெயில் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  7. அதே கடாயில் சிறிதளவு வெண்ணெய் விட்டு நாம் அரைத்து வைத்துள்ள மாசாலாவை சேர்த்து கிளறவும்.
  8. பின் காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். மாசாலாவின்‌ பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்.
  9. பின் சிக்கனை கிரேவியில் சேர்த்து அதில் கசூரி மேத்தி, சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நான்கு நிமிடம் சமைக்கவும்.
  10. அவ்வளவுதான் சுவையான பட்டர் சிக்கன் தயார். சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்திற்கு மிகவும் ருசியாக இருக்கும்.