ரோட்டு கடை ஸ்டைல் ருசியான சிக்கன் பக்கோடா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான் !

Summary: சிக்கன் பக்கோடா என்றாலே, நாவில் எச்சில் ஊறும். வீட்டில் அதை செய்யத் தெரியாமல் தான் சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்குச் சென்று சிக்கன் பக்கோடா வாங்குவோம். பொதுவாக நாம் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் மழை காலம் வந்தால் போதும் சூடான மொறு மொறு பக்கோடா சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். இவ்வாறு தோன்றிய உடன் நாம் அனைவரும் வெங்காய பக்கோடா என்று இதுபோன்ற ஒரே ரெசிபியினை செய்து சாப்பிட்டு இருப்போம். அதனால் இன்று கொஞ்சம் வித்தியாசமான சிக்கன் பக்கோடா செய்து பாருங்கள்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 2 டீஸ்பூன் கடலை
  • 2 டீஸ்பூன் கார்ன்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் புட் கலர்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 வாணலி

Steps:

  1. கடலை மாவு, கார்ன் பிளார், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு, புட் கலர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  2. அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. அதில் சிக்கனை சேர்த்து இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கன் பக்கோடா தயார்.
  5. அவ்வளவுதான் இப்போது சூடான சுவையான ரோட்டு கடை சிக்கன் பக்கோடா தயார்.