மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மக்காச்சோள வடை இப்படி செய்து பாருங்க! வீட்டில் செய்து அசத்துங்க!

Summary: வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவோம், குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. ஆகவே எளிய பொருட்களை கொண்டு இப்பவே உங்கள் வீட்டில் மக்காச்சோள வடை செய்யலாம்.

Ingredients:

  • 2 கப் மக்காச்சோளம்
  • 1 பெரிய
  • 2 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி
  • கொத்தமல்லி இலை
  • கறிவேப்பிலை
  • தண்ணீர்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பின் அதனுடன் சோளம் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. அரைத்த விழுதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, கடலை மாவு, அரிசிமாவு சேர்த்து கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசையவும். கைகளால் பிடித்தால் உதிராமல் புட்டு பதத்திற்கு வர வேண்டும்.
  5. இனி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிடித்த உருண்டைகளை தட்டையாக தட்டி சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. அவ்வளவுதான். வெளிப்பக்கம் மொறுமொறுப்பான, உட்பக்கம் மிருதுவான சுவையான சோள வடை ரெடி.
  8. காபி, டீக்கு மிக சுவையாக இருக்கும். மோர் குழம்பில் ஊற வைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.