கிராமத்து ஸ்டைல் ருசியான் கொள்ளு பருப்பு பொங்கல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Summary: கொள்ளுப்பருப்பு பொங்கல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் செய்து அத்துடன் சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ கப் கொள்ளுப்பருப்பு
  • 1 கப் அரிசி
  • 100 கிராம் நெய்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கொள்ளை வாசம் வரும்வரை நன்கு வறுத்து உரலில் குத்தி உமி போக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அடுத்து அதை ஒரு பாத்திரத்தில் அரிசியுடன் ஒன்றாகக் கலந்து கழுவி உலை கொதித்தபின் போட்டு வேக வேக விடவும்.
  3. பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்கு குழைய விடவும்.
  4. அடுத்து, ஒரு சின்ன கடாயில் நெய் விட்டு, அத்துடன் சீரகம், மிளகு இரண்டையும் தாளித்துக் சாதத்துடன் கலந்துவிடவும்.
  5. இப்பொழுது சுவையான கொள்ளுப் பருப்பு பொங்கல் தயார்.