ஒரே வாரத்தில் அல்சரை சரி செய்யும் ருசியான மணத்தக்காளி கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க!

Summary: உடல் ஆரோக்கியம் பெற சத்தான கீரை காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரை வகைகளை எப்பொழுதும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு மணத்தக்காளிக்கீரை நமது உடம்பிற்கு மிகுந்த சக்தி அளிக்கக்கூடியதாகும். இதில் பலவித மருத்துவ குணங்கள் இருக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுப்புண், வாய் புண் மற்றும் உடல் உஷ்ணம் போன்ற அனைத்திற்கும் இது தீர்வாக அமைகிறது. கீரையை தினமும் உணவுடன் கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். வாருங்கள் இதில் ஒன்றான மணத்தக்காளி கீரை கூட்டு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கட்டு மணத்தக்காளி கீரை
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 மூடி தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • 2 வரமிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் கீரையுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்தால், மணத்தக்காளி கீரை கூட்டு ரெடி!!