மணமணக்கும் மசாலா உப்புமா செய்வது எப்படி ?

Summary: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர் உப்புமா என்ற பெயரை கேட்டாலே தெரித்து ஓடி விடுகிறார்கள் அதற்கு காரணம் எளிமையான முறையில் செய்து விடலாம் என்பதால் அடிக்கடி பலர் வீடுகளில் ஒரே மாதிரியான உப்புமா அடிக்கடி செய்து கொடுப்பதுதான் ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் உப்புமா செய்யும்போது வித்தியாசமாக சமைத்துக் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆம், அந்த வகையில் இன்று மணமணக்கும் மசாலா உப்புமா பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். இதில் நாம் காய்கறிகள் மற்றும் மசாலா சேர்த்து தயார் செய்வதால் இது அட்டகாசமான சுவையில் இருக்கும் நீங்கள் இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மசாலா உப்புமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கேரட்
  • 1 கப் பீன்ஸ்
  • ½ கப் பச்சை பட்டாணி
  • ½ tbsp உப்புமா
  • 3 வர மிளகாய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 tbsp மல்லி
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp துருவிய தேங்காய்
  • 1 tbsp நெய்
  • 300 கிராம் ரவா
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp முந்திரி
  • 1 tbsp இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 தக்காளி
  • வேக வைத்த காய்கறி
  • வறுத்து அரைத்த மசாலா
  • 2 ½ tbsp உப்பு
  • 4 கப் தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. முதலில் ஒரு குழம்பு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் இல்லாமல் வர மிளகாய், பட்டை, கிராம்பு, மல்லி மற்றும் கடலை பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும், அனைத்து பொருட்களும் நன்றாக வறுபட்டதும் இதனுடன் சிறிது துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
  3. அதன் பிறகு கடாயில் சிறிது அளவு நெய் ஊற்றி நெய் உருகி காய்ந்ததும் 300 கிராம் அளவிலான ரவையை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். ரவை நன்றாக வறுபட்டதும். அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும், பின் அனைத்து பொருட்களும் நன்றாக வதக்கிய பின் இதனுடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் இதனுடன் சிறிதளவு கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இதனுடன் ஒரு நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும், தக்காளி மென்மையாக வந்ததும்.
  6. பின் நாம் வேக வைத்த காய்கறிகளையும் இதனோடு சேர்த்து சிறிது மல்லி இலை தேவையான அளவு உப்பு மற்றும் நாம் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு காய்கறி வேக வைத்த தண்ணீருடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  7. பின்பு மசாலா நன்கு கொதித்து வந்ததும் இதனுடன் ரவையை சேர்த்துக்கொண்டே கிளறி விடுங்கள் ரவையை கட்டி இல்லாமல் கிளறி விட்டு பின்பு ரவை நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் இதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் மணமணக்கும் மசாலா உப்புமா தயாராகிவிட்டது.