காரசாரமான ருசியில் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!!

Summary: இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. செப்பங்கிழங்கு குழம்பு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு ஆகும். இது வெள்ளை சாதம் அல்லது இட்லி, தோசை போன்றவற்றுக்கு பக்க உணவாக பரிமாறக்கூடிய மிகவும் எளிமையான மற்றும் எளிதான குழம்பு. நம்முடைய பாட்டிகள் வைப்பது போலவே பாரம்பரிய முறையில் சூப்பரான சேப்பங்கிழங்கு புளி குழம்பு முறையாக வைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

Ingredients:

  • 250 கிராம் சேப்பங்கிழங்கு
  • 1 கப் சின்ன
  • 1/2 கப் பூண்டு
  • 1 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் சாம்பார்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்
  • கல் உப்பு
  • 1/2 கப் தேங்காய்
  • 8 வரமிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1/2 கப் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 வவாணலி

Steps:

  1. சேப்பங்கிழங்கை கழுவி, குக்கரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
  2. சூடு ஆறியவுடன் தோல் உரித்து அதனை நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.
  3. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வற்றல், தனியா, தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  4. பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  5. வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து கலந்து பொரிந்ததும் உரித்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின்பு வேகவைத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை துண்டுகளை சேர்த்து வதக்கி, பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள், கல் உப்பு கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவும்.
  8. கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து, கால் கப் புளித்தண்ணீர் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
  9. நன்கு கலந்து உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு தயார்.
  10. இப்போது மிகவும் சுவையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு சுவைக்கத் தயார். சாதம், தயிர் சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.