இட்லி, தோசைக்கு ருசியான பூண்டு இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! இனி சாம்பார் சட்னி எதுவும் தேவையில்லை!!

Summary: பூண்டு இட்லிப்பொடி மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய, அதே சமயத்தில் சுவையான காரசாரமான இட்லி பொடி. இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை தேவை காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய 2 பொருட்களை வைத்து சுவையான பூண்டு பொடி செய்யலாம், இதனை 10 நிமிடங்களில் செய்து கொடுக்கலாம், ஒரே மாதிரி இட்லி பொடியை சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான பொடி வகைகள் செய்து சாப்பிட சுவையாக இருக்கும். பூண்டு விரும்பாத மக்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு, சுவையான பூண்டு பொடியை எப்படி தயார் செய்யலாம் என பார்க்கலாம்.

Ingredients:

  • 1/2 கப் பூண்டு
  • 1/4 கப் உளுந்து
  • 1/4 கப் தேங்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 8 வரமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1 ஸ்பூன் கல் உப்பு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 4 டீஸ்பூன் நல்லெண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. தோலுரித்த பூண்டை இஞ்சி தட்டும் குழவியில் தட்டி, வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. வாணலியில் 2ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டிய பூண்டை பொன்னிறம் ஆகும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
  3. ஆறியதும் கைகளால் அழுதினால் நொறுங்கும் அளவுக்கு வறுபட்டிருக்க வேண்டும்.
  4. பின் அதே எண்ணையில் உளுந்து சேர்த்து சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
  6. 1சொட்டு எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நொறுங்கும் அளவுக்கு வறுக்கவும்.
  7. 1ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லி விதை சேர்த்து வறுபட்டதும் அதனுடன் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
  8. அவை வறுபட்டதும் அடுப்பை அணைத்து அதே சூட்டில் சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுபட்டதும் உளுந்துடன் சேர்த்து ஆற வைக்கவும்.
  9. வறுத்த அனைத்தும் ஆறியதும் மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் தேங்காய் தவிர மீதி உள்ள வறுத்த பொருட்கள் மற்றும் கல் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  10. பின் அதனுடன் வறுத்த பூண்டு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.
  11. இந்த பொடி,எண்ணெய் சேர்த்து செய்திருப்பதால் பிரிட்ஜ்ல் வைத்து 1 மாதம் வரையிலும் பயன்படுத்தலாம்.
  12. அவ்வளவுதான். மணமான, சுவையான, பூண்டுஇட்லி பொடி ரெடி. இட்லி தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், மிகவும் சுவையாக இருக்கும்.