மதிய உணவுக்கு சுட சுட ருசியான பட்டாணி கோஸ் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: லன்ச்க்கு பட்டாணி கோஸ் சாதம் இனி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.எப்படி இந்த சாதம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் முட்டை கோஸ்
  • ½ கப் பச்சைபட்டாணி
  • 3 சின்ன வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
  • உப்பு
  • கொத்தமல்லி
  • 1 கப் சாதம்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்பு பருப்புகள், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் அதில் கோஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
  5. தண்ணீர் நன்கு சுண்டியதும், வேக வைத்த சாதத்தை சேர்க்கவும்.
  6. மசாலா மற்றும் காய்களுடன் சேரும்படி உடையாமல் கிளறி விடவும்.
  7. கடைசியாக கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான பட்டாணி கோஸ் சாதம் ரெடி.