மணமணக்கும் கல்யாண கேசரி எப்படி செய்வது ?

Summary: பொதுவாக நாம் என்னதான் வீடுகளில் சுவையாக மணமணக்கும் வகையில் கேசரி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தாலும் அவர்கள் விரும்பி தான் சாப்பிடுவார்கள். இருந்தாலும் கல்யாண வீடுகளில் செய்யும் கேசரி போல் வராது. ஏனென்றால் கல்யாண வீடுகளில் கேசரி செய்து வைத்திருந்தால் நாம் வீட்டு நபர்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். ஆனால் இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் கல்யாண வீட்டில் வைப்பது போன்ற உங்கள் வீட்டில் கேசரி எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம். இதுபோன்று ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டில் கேசரி செய்து உங்கள் வீட்டில் அனைவருக்கும் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். என் வீட்டில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகையாக மாறிவிடும். ஆகையால் இந்த கல்யாண கேசரி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 5 tbsp நெய்
  • 4 tbsp எண்ணெய்
  • 10 முந்திரி பருப்பு
  • 2 tbsp உலர் திராட்சை
  • 1 கப் ரவை
  • 3 கப் தண்ணீர்
  • 1 ¼ கப் சக்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை கேசரி கலர்
  • ½ tbsp ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி கொள்ளவும். பின் நெய் நன்றாக உருகி காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் உடைத்த முந்திரி பருப்புகளை சேர்த்து வறுக்கவும் பின் இதனுடன் நான் வைத்திருக்கும் உலர் திராட்சையை இதனோடு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு நாம் வறுத்த பொருட்களை தனியாக எடுத்து வைத்து விட்டு. பின்பு அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் ரவையை சேர்த்து நன்றாக வறுத்தெடுங்கள். மிதமான தீயிலேயே ரவையை இப்படி நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் அளவில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின் தண்ணீர் நன்றாக கொதித்ததும் இந்த தண்ணீரை வறுக்கும் ரவையுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொண்டு கலக்கி விட்டு கிளறி விடவும்.
  4. பின்பு ரவை நன்றாக வெந்து வந்ததும் அதனுடன் நாம் வைத்திருக்கும் சர்க்கரையையும் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு. அதன் பின் இரண்டு நிமிடத்தில் ரவை நன்றாக வெந்ததும் நான் வைத்திருக்கும் கேசரி பவுடரை சிறிது தண்ணீரில் கலந்து கேசரியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. அதன்பின்பு கேசரியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யும் மற்றும் ஒரு டீஸ்பூன் நெய்யும் சேர்த்து நன்றாக கிளறிவிட அதன் பின் சிறிது நேரம் கழித்து கேசரியுடன் நாம் வறுத்து வைத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், உலர் திராட்சை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  6. அதன் பின் ஒரு நிமிடம் நன்றாக கிளறிவிட்டு கடைசியில் கடாய் இருக்கும் பொழுது மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்குங்கள் அவ்வளவுதான் சுவையான மணமணக்கும் கல்யாண கேசரி தயாராகிவிட்டது.