ருசியான  தேங்காய் மிளகு நண்டு வறுவல் சுலபமாக இப்படி செய்து அசத்துங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: அசைவம் விரும்பி உண்ணுபவர்களுக்கு நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதன் சுவை எவ்வளவு அதிகமோ, அவ்வளவு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதை செய்வதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும், குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் சளி இருமலை வேரோடு வெளியேற்றிவிடும். ஒருமுறைதேங்காய் மிளகு நண்டு சாப்பிட்டால், அதன் ருசி தினமும் கேட்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த அற்புதமான தேங்காய் மிளகு நண்டு மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/4 கிலோ நண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச்சேர்த்து பிரட்டவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும். சுவையான தேங்காய் மிளகு நண்டு தயார்.