நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் ருசியான வாழைத்தண்டு சூப் இப்படி செய்து பாருங்க!

Summary: ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.எப்படி இந்த சூப் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீகேலும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் வாழைத்தண்டு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 வர மிளகாய்
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை
  • ½ டீஸ்பூன் இஞ்சி, பூண்டு
  • ½ டீஸ்பூன் மிளகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • உப்பு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  3. இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய / துருவிய தண்டு சேர்த்து 6 கப் தண்ணீர் விட்டு மிதமான கொதிக்க விடவும்.
  4. பாதி வெந்திருக்கும் நேரம் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கவும்.
  5. சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.