அட்டகாசமான சோயா பிரியாணி எப்படி செய்வது ?

Summary: பிரியாணி மிகவும் பிரபலமான ஒரு உணவாக இன்று காலகட்டங்களில் வலம் வருகிறது. இந்த பிரியாணியை பல வகையில் நாம் செய்து சாப்பிட்டு வருகிறோம். சிலர் பிரியாணிக்காக உயிரே விடும் அளவிற்கு அதை நேசிக்கவும் செய்கிறார்கள். அப்பட்ட பிரியாணியை இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் செய்ய இருக்கிறாம். ஆம், இன்று சோயா பிரியாணி செய்ய போகிறோம் இதை ஒரு முறை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சோயா பிரியாணிக்கு முற்றிலும் அடிமையாக இருப்பவர்கள். அந்த அளவிற்கு தாருமாரான சுவையும், ருசியும் கொண்டிருக்கும் இந்த இந்த சோயா பிரியாணியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • அரைத்த பேஸ்ட் பாதி
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ¼ கப் தயிர்
  • 1 tbsp கரம் மசாலா
  • உப்பு
  • 2 கப் சோயா
  • 2 tbsp நெய்
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பிரியாணி இலை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 பட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • ¼ கப் புதினா இலை
  • ¼ கப் மல்லி இலை
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 2 தக்காளி
  • மிக்ஸியில் அரைத்த
  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 1 tbsp நெய்
  • 3 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் இரண்டு கப் சோயாவை ஒரு பெரிய பவுளில் போட்டு அதில் தேவையான அளவு கொதிக்க வைத்த சூடான தண்ணீரை சோயாவில் ஊற்றிக் கொள்ளவும். சோயாவை இப்படியா ஒரு 20 நிமிடம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு நாம் ஊற வைத்த சோயாவை நன்கு பிழிந்து தண்ணீர் இல்லாமல் எடுத்து ஒரு பெரிய பவுளில் சேர்த்துக் கொள்ளவும்.
  3. பின் இதனுடன் நான் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டிலிருந்து பாதியளவு எடுத்து சோயாவில் சேர்த்துக் கொள்ளவும், பின் இதனுடன் தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சோயாவுடன் நன்கு கலந்து ஒரு 20 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும்.
  4. பின் குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை போன்ற பொருட்களை சேர்த்து ஒரு பத்து வினாடிகள் நன்றாக வறுத்து கொள்ளவும்.
  5. அதன்பின் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் புதினா மற்றும் மல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும், பின் தக்காளியும் மென்மையாக வதங்கியதும் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிளறி விட்டுக் கொள்ளவும். பின் நாம் ஊற வைத்த சோயா மற்றும் நாம் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  7. பின் 2 மணி நேரம் நீரில் ஊற வைத்த இரண்டு கப் பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்த்து அதற்கு மேல் ஒரு கைப்பிடி புதினா இலை மற்றும் மல்லி இலை சேர்த்து, அதன் மேல் சிறிதளவு நெய் சேர்த்து. கடைசியில் மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒருமுறை கிளறி விட்டு குக்கரை மூடி விடுங்கள்.
  8. அதன் பிறகு மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை குக்கரை அடுப்பில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் .அதன் பின்பு பிரஷர் குறைந்த உடன் முடியை திறந்து பிரியாணியை சாப்பிட ஆரம்பியுங்கள் அவ்வளவுதான் ருசியான சோயா பிரியாணி இனிதே தயாராகி விட்டது.