இரவு உணவுக்கு ருசியான ஒயிட் சாஸ் பாஸ்தா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! போட்டி போட்டு சாப்பிடுவார்கள்!!

Summary: உங்களுக்கு நல்ல சுவையில் பாஸ்தா செய்யத் தெரியாதா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற, அவற்றுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஒயிட் சாஸ் பாஸ்தா உணவகங்களில் வழங்கப்படும் பிரபலமான பாஸ்தா ரெசிபிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் ஒயிட் சாஸ் பாஸ்தா தெருக் கடைகளிலும் கிடைக்கிறது. பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

Ingredients:

  • 200 கிராம் பாஸ்தா
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 டீஸ்பூன் ஹெர்ப்ஸ்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 கப் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் சீஸ்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் பாஸ்தாவை ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பாஸ்தா நன்கு வெந்த பின் அதை நன்கு வடிகட்டி கொள்ளவும்.
  3. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் முழுவதுமாக வடிந்த பாஸ்தா அதனுடன் மிளகு தூள், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் பட்டர் சேர்த்து உருகியதும் மைதா அதனுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  5. பின் தேவையான அளவு பால் ஊற்றிக் கொண்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக க்ரீம் ஆகும் வரை கிளறிக் கொள்ளவும்.
  6. பின் அதனுடன் பாஸ்தா சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும். சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.