காரசாரமான ருசியில் அடை குருமா இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: சப்பாத்தி, அடை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அட்டகாசமான அடை குருமா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.எப்படி இந்த குருமா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் அடைக்கலவை
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 10 பல் பூண்டு
  • 4 இலவங்கம், பட்டை
  • 1 கைப்பிடி தேங்காய் துருவல்
  • 2 ஸ்பூன் பொட்டு கடலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், பூண்டு தோல் உரித்து அரிந்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை இவற்றைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
  2. அடுத்து இதிலே வெங்காயம், பூண்டு இவற்றைப் போட்டு வதக்கவும்
  3. வதங்கியதும் எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து அத்துடன் தேங்காய் துருவல், இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகைத் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்
  5. அடைக்கலவை, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்
  6. சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிட கமகம அடை குருமா தயார்.