மதிய உணவுக்கு சுட சுட ருசியான அரிசி பருப்பு சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: அட்டகாசமான சுவையில் அரிசி பருப்பு சாதம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.குழந்தைகளுக்கும் வேளைக்கு செய்பவர்களுக்கும் லன்ச் இந்த சாதம் செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் அரிசி
  • துவரம் பருப்பு
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 8 பல் பூண்டு
  • உப்பு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை
  • 1 தக்காளி
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் நெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் அரிசி, பருப்பை கழுவி 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைக்கவும். தக்காளி, பச்சைமிளகாய் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுத்து வெங்காயம், பூண்டை உரித்து வைக்கவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். 3. பின் அதில் வெங்காயம், பூண்டு, பச்சைமிளக தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  3. பின் அரிசி பருப்பை சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும். 5. அதன் பிறகு 3 டம்ளர் தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. அடுத்து தண்ணீர் வற்றியதும் கலவையை குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.
  5. பரிமாறும் போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த் கலந்து பரிமாறவும்