ஆரோக்கியத்தை அள்ளி தரும் ருசியான முருங்கைக்கீரை சூப் இப்படி செய்து பாருங்க!

Summary: முருங்கைக்கீரை சூப் இது போன்று இனி செய்து சுவைத்து பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அவ்வளவு ருசியாக இருக்கும். சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • முருங்கைக்கீரை
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பல் பூண்டு
  • மிளகு தூள்
  • ½ டீஸ்பூன் சீராக தூள்
  • 1 டீஸ்பூன் கார்ன் ப்ளார் பவுடர்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து கார்ன் ஃப்ளாரில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. தக்காளி வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, மிளகு தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. பிறகு கொதித்ததும் முருங்கைக்கீரையைப் போட்டுக் கிளறவும்.
  6. கீரை வெந்ததும், கரைத்து வைத்துள்ள கார்ன் ஃப்ளாரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  7. இப்பொழுது சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.