சுட சுட ருசியான வெஜிடபிள் பிரியனி இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: அட்டகாசமான சுவையில் இனி வெஜிடபிள் பிரியாணி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இது போன்று லஞ்சிக்கு செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 4 கப் அரிசி
  • 4 பெரிய வெங்காயம்
  • 6 உருளைக்கிழங்கு
  • 2 கேரட்
  • 2 கப் பச்சை பட்டாணி
  • 1 காலிபிளவர்
  • 2 கப் நெய்
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 3 பிரிஞ்சி இலை
  • 2 துண்டு இஞ்சி
  • தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 12 பல் பூண்டு
  • 4 பட்டை
  • 5 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் காச காச
  • உப்பு
  • கறிமசால்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடேறியதும் அதில் அரிசியைப் போட்டு பொரிக்கவும்.
  2. அடுத்து பொரிந்ததும் எட்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  3. பிறகு உப்பு கலந்த நீரில், உருளைக் கிழங்கு, பட்டாணி, காரட், காலிஃ பிளவர் ஆகியவற்றை வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் ஜாதிபத்ரியும் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் நன்கு வதங்கியதும் இதோடு இஞ்சி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிமசால் ஏலக்காய், கசகசா பட்டை, கிராம்பு, சிறிது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பிறகு வேக வைத்துள்ள காய்கறிகள் வெந்த நீர் எல்லாம் சேர்த்து கிளறவும்.
  7. நன்கு தண்ணீர் சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு வேக வைத்த சாதம் இதில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.