சுவையான கேரளா அரிசி புட்டு செய்வது எப்படி ?

Summary: இதில் இன்று நாம் புட்டு எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் காணலாம். பொதுவாக பல வகைகளில் புட்டு செய்யலாம் ரவை புட்டு, கேப்பை புட்டு, கோதுமை புட்டு, திணை புட்டு, மீன் புட்டு இதுபோன்று ஏராளமான புட்டு வகைகள் உள்ளனர். ஆனால் இன்று நாம் செய்யப்போவது பச்சரிசியை வைத்து அரிசி புட்டு செய்ய போகிறோம். இதற்கு கண்டிப்பாக புட்டு பாத்திரம் வேண்டும் அதை முக்கியமாக எடுத்துக் கொள்ளுங்கள் புட்டு எவ்வாறு செய்வது என்பதை தொடர்ந்து பாருங்கள்.

Ingredients:

  • 1/2 KG பச்சரிசி
  • 1 முமு தேங்காய்
  • 1 கப் சீனி அல்லது கருப்பட்டி
  • தூள் உப்பு

Equipemnts:

  • 1 புட்டு அவிக்கும் பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 மீடியம் அளவு தட்டு
  • 2 பவுள்

Steps:

  1. சுவையான அரசி புட்டு செய்முறை
  2. முதலில் ஒரு மணி நேரங்கள் பச்சரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறிய பச்சரிசியை ஈரம் இல்லாத துணியில் அரிசியை பரப்பி விட்டு பேன் அல்லது நிழலில் உலர வையுங்கள்.
  3. உலர வைத்த பச்சரிசி ஈரம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு ஈரம் காய்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அப்படி அரைத்த மாவை சல்லடையில் நன்றாக சலித்துக் கொண்டு சலித்தேடுத்த மாவை ஒரு கடாய் ஒன்றில் போட்டு நன்றாக வறுக்கவும்.
  5. மாவு திருத்திரு என்று வரும் அளவுக்கு வறுத்து எடுக்கவும் அப்படி வறுத்தெடுத்த மாவை ஒரு பவுல்லிள் எடுத்து கொள்ளவும்.
  6. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். (மாவு கட்டியாகவும் அல்லது கூழ் மாதிரியும் ஆகிவிடக்கூடாது ) திருத்திருவனா இருக்கவும்.
  7. அதன் பிறகு நாம் எடுத்துக்கொண்ட தேங்காய்யை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
  8. பின்பு புட்டு அவிக்கும் பாத்திரத்தில் அடியில் அரை பாத்திரம் தண்ணீர் ஊற்றி நிரப்பி நன்றாக கொதிக்க விடவும்.
  9. தண்ணீர் கொதித்த உடன் புட்டுக் குழாயில் அடியில் சில்லை போட்டு 1/4 குழாய்க்கு புட்டு மாவை அமுக்காமல் போடவும்.
  10. பிறகு தேங்காய் உள்ளே போட்டு மீண்டும் புட்டு மாவை உள்ளே வைக்கவும். மேல் துருவிய தேங்காய் போடவும் அதற்கு மேல் மறுபடியும் புட்டு மாவு வைத்து துருவிய தேங்காய் மேலே போட்டுவும்.
  11. புட்டு குழாயை மூடி இப்போது புட்டுக் குழாயை புட்டு பாத்திரத்தில் வைத்து மாட்டி விடவும்.
  12. புட்டுக் குழாயின் மேல் உள்ள துவாரம் வழியாக ஆவி வரும் வரை காத்திருக்கவும் ஆவி வந்ததன் பின் ஒரு நிமிடங்கள் காத்திருந்து புட்டுக் குழாயை கழட்டி எடுக்கவும்.
  13. நாம் எடுத்துக்கொண்ட மீடியமான தட்டை மேல் புட்டுக் குழாயை வைத்து ஏதாவது கரண்டி ஒன்றை புட்டுக் குழாய் பின் வழியில் இருந்து குத்தி மெதுவாக புட்டை குத்தி வெளிய எடுக்க வேண்டும்
  14. எடுத்த புட்டினுடன் சீனி அல்லது கருப்பட்டியை சேர்த்து சாப்பிடவும்.