நம்மை வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமா பேரிச்சம்பழம் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Summary: பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது உடம்புக்கு மிகவும் சத்தான பேரிச்சம்பழம் கொண்டு செய்யப்படும் பேரிச்சம்பழம் மில்க் ஷேக். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை உலகில் கிடைக்கும் அனைத்து விதமான மில்க் ஷேக்குகல் பேரையும் விரல்நுனியில் வைத்திருப்பார்கள். மில்க் ஷேக்குகள் குழந்தைகளுக்கு பரிமாறும் சுவையான மற்றும் ஆரோக்கியமான செய்முறையாகும்.

Ingredients:

  • 2 கப் பால்
  • 1 கப் பேரிச்சம்பழம்
  • 2 டேபிள் ஸ்பூன் நியூட்ரெலா

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 பால் பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 கண்ணாடி கிளாஸ்

Steps:

  1. முதலில் பேரிச்சம்பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விடவும்.
  2. பின்னர் அடுப்பில் பால் காய்ச்சும் பாத்திரத்தை வைத்து பாலை காய்த்துக் கொள்ளவும்.
  3. காய்ச்சிய பாலில் பேரிச்சம் பழம் மற்றும் நியூட்ரெலா சேர்த்து கலந்து விடவும். அதனை 15-30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  4. இனி மிக்சி ஜாரில், ஊறிய பேரீச்சம்பழங்களை, சேர்த்து அதனுடன் ஊறிய பால் சிறிதளவு ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பின் மொத்த பாலையும் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. பின் அதனை வடிகட்டி மூலம் வடிகட்டி பரிமாறலாம்.
  7. வடிகட்டுவதால், நாம் பேரிச்சம் பழங்கள் சேர்திருப்பதே தெரியாது மிகவும் சுவையாக இருக்கும்.
  8. அவ்வளவுதான். சுவையான பேரிச்சம்பழம் சாக்லேட் மில்க் ஷேக் ரெடி.