ருசியான மொச்சை கருவாட்டு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: சண்டே என்றாலே மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாறுதலுக்கு கருவாட்டு குழம்பு செய்து கொடுங்கள். அப்புறம் வாரம் வாரம் அதைதான் வீட்டில் உள்ளவர்கள் செய்ய சொல்லுவார்கள். இன்றும் தென் மாவட்டங்களில் அதிகமாக கருவாட்டு குழம்பைதான் வைத்து சாப்பிடுவார்கள். அது உடலுக்கு நல்லதும் கூட. பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு என்றால் கொள்ளை பிரியம். அதிலும் அந்த கருவாட்டு குழம்பை சமைத்து, மறுநாள் சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குறிப்பாக கிராமப்புறங்களில் சமைக்கப்படும் கருவாட்டு குழம்பு தான் ருசியாக இருக்கும்.

Ingredients:

  • 15 சால கருவாடு
  • 3 கத்தரிக்காய்
  • 1/4 கப் பச்சை மொச்சை
  • 2 தக்காளி
  • 4 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 15 சின்ன
  • புளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் தேங்காய், சீரகம், வெங்காயம் மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரில் கருவாட்டை போட்டு 10-20நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. பின் எடுத்து தலை, வால் கிள்ளி செதில்களைச் சுரண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு எல்லா கருவாட்டையும் சுத்தம் செய்து பின் கழுவிக் கொள்ளவும்.
  4. பின்னர் அடுப்பில் குழம்பு வைக்கும் பாத்திரத்தை வைத்து சூடானதும் அரைத்த தேங்காய் விழுது, குழம்பு மிளகாய் தூள் மற்றும் புளி கரைசல் சேர்த்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும்.
  5. தீயை குறைவாக வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும், நறுக்கிய தக்காளி, கத்தரிக்காய், மொச்சை மற்றும் சுத்தம் செய்த கருவாடு சேர்க்கவும்.
  6. பின்னர் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  7. கருவாடு மற்றும் மொச்சை வெந்து குழம்பு பதம் வந்ததும் உப்பு சரிபார்த்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
  8. அவ்வளவு தான். சுவையான மொச்சை கருவாட்டு குழம்பு ரெடி.