ரசம் சாதம், தயிர் சாதமுடன் சாப்பிட ருசியான கோபி 65 இனி இப்படி செய்து பாருங்க!

Summary: உங்களுக்கு காலிப்ளவர் 65 ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மொறு மொறுனு காலிப்ளவர் 65 இனி இப்படி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 காலிப்ளவர்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 டீஸ்பூன் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • கேசரி பவுடர்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் காலிப்ளவரை சிறு சிறு துண்டுகளாக்கி அதை உப்பு சேர்த்து கொதிக்க வைத்த சுடு நீரில் இரண்டு நிமிடம் போட்டு வைக்கவும்.
  2. பின் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, உப்பு, கேசரி பவுடர், தனி மிளகாய் தூள் சேர்க்கவும். பின்பு அதனை நன்கு கலந்து அந்த கலவையை பத்து நிமிடம் (இஞ்சி பூண்டு சேர்ப்பதால்) ஊற வைக்கவும்.
  3. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிப்ளவரை போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. கடைசியாக இறுதியில் அதே எண்ணெயில் கறிவேப்பிலை போட்டு பொரித்து சூடான கோபி 65 ல் சேர்க்கவும். சூடான சுவையான கோபி 65 ரெடி.