முட்டை குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Summary: முட்டை குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அதுவும் ஹோட்டலில் தரப்படும் முட்டை குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் அதே சுவையில் முட்டை குழம்பு எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. இனி கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் எப்படி முட்டை குழம்பு செய்வதென்று தான் பார்க்க போகிறோம்.இந்த முட்டை குழம்பு செய்து சுட சுட சாதம், சப்பாத்தி, தோசை போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் அற்புதமாக இருக்கும்.இந்த முட்டை குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 5 முட்டை
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 2 இலவங்கம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 4 உருளை கிழங்கு
  • கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • ½ ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 ஸ்பூன் குழம்பு பொடி
  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • கொத்தமல்லி தலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், இலவங்கம், சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  3. வெங்காயம் வத்தகையதும் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பச்சை வாசனை போனதும் கருவேப்பிலை மற்றும் நறுக்கிய உருளை கிழங்கு சேர்த்து அத்துடன் சிக்கன் மசாலா, கறிமசாலா தூள், குழம்பு பொடி, மஞ்சள் தூள், சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  5. குழம்பு கொதித்ததும் வேக வைத்த முட்டையை இரு புறம் கீறி குழம்பில் போடவும்.
  6. 5 நிமிடம் கொதித்ததும் அடுப்பை நிறுத்தவும். இப்பொழுது முட்டை குழம்பு தயார்.