காரசாரமான ருசியில் முட்டை பரோட்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: உங்களுக்கு முட்டை பரோட்டா மிகவும் பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது முட்டை பரோட்டா இது போன்று ஒரு முறை செய்து சுவைத்திடுகள். அப்புறம் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 4 பரோட்டா
  • 4 முட்டை
  • ¼ கிலோ வெங்காயம்
  • 5 பச்சைமிளகாய்
  • ¼ கிலோ தக்காளி
  • 100 கிராம் கேரட்
  • 100 கிராம் பச்சை பட்டாணி
  • 1 டீஸ்பூன் கறிமசாலாதூள்
  • 100 கிராம் டால்டா
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் பரோட்டாவைப் பிய்த்து சிறிது துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். காரட்டை துருவவும்,பச்சை பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து டால்டாவைப் போட்டு சூடானதும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப் பிலையைப் போட்டு வதக்கவும். வதங்கி யதும் கேரட், தக்காளியைப் போடவும்.
  3. பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற் கலவையை வேக வைக்கவும்.
  4. அடுத்து அதில் பச்சை பட்டாணி, கறிமசாலாத்தூள், உப்புப் போட்டுக் கிளற வேண்டும்.
  5. கலவை கெட்டியானதும் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறவும். உடனே உதிர்த்து வைத்த பரோட்டாவைப் போட்டு தொடர்ந்து கிளறிவிடவும். எல்லாம் கலந்து நன்கு மணம் வரும். அப்போது இறக்கி, கொத்துமல்லித் தழையை நறுக்கி, தூவி பரிமாறவும்.