அடிக்கிற வெயிலுக்கு இதமா சில்லினு வில்வ பழம் ஜுஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!!

Summary: சுட்டெரிக்கும் கோடைக்காலம், உடனடி ஆற்றலைப் பெறுவதற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் சில புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானங்கள் தேவைப்படுத்துகிறது. பலர் தங்களின் தாகத்தைத் தணிக்க எலுமிச்சைப்பழம் மற்றும் கரும்புச் சாற்றை பருகுகின்றனர். உங்கள் கோடைகால உணவில் ஆரோக்கியமான பானங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் வில்வ பழ ஜூஸ். பழங்களின் ராஜா என அழைக்கப்படும் வில்வ பழத்தின் மூலம் அதிக உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

Ingredients:

  • 1 வில்வ
  • 2 கப் நாட்டுச் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் தேன்
  • 5 ஐஸ் கட்டிகள்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கண்ணாடி

Steps:

  1. முதலில் நன்கு பழுத்த வில்வ பழத்தினை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு ஸ்பூனால் வில்வ பழ ஓட்டில் ஒட்டி இருக்கும் சதையை எடுத்துக் வைத்துக் கொள்ளலாம்.
  3. அதை அப்படியே தண்ணீரில் சில வினாடிகள் போட்டால் விதை மற்றும் சதை மிதக்கும்.
  4. பின்னர் அதனை வடி கட்டி மிக்ஸியில் சேர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  5. பின் வடிகட்டி மூலம் வடிகட்டி ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாத்தி தேன் சேர்த்து கலந்து விடவும்.
  6. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வில்வ பழம் ஜுஸ் தயார். பரிமாறும் போது ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.