ருசியான கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!!

Summary: நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை.இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் கட்டாயம் பிரிஞ்சி இடம்பெறும். சாதரணமாகவே எல்லோருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் பிடிக்கும். அதிலும் பிரிஞ்சி சாதம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதிலும் குறிப்பாக கல்யாண வீட்டில் செய்யும் பிரிஞ்சி சாதம் சூப்பரான சுவையில் இருக்கும். பலருக்கும் கல்யாண பிரிஞ்சி தான் ஃபேவரெட்.

Ingredients:

  • 2 கப் பாசுமதி அரிசி
  • 8 பீன்ஸ்
  • 1 கேரட்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 2 டீஸ்பூன் இஞ்சி
  • 2 பெரிய
  • 1 தக்காளி
  • 1/2 கப் புதினா, கொத்தமல்லி
  • 3 கப் தேங்காய் பால்
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை
  • 3 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • உப்பு
  • 20 முந்திரி
  • 3 பிரெட் துண்டுகள்
  • எண்ணெய்
  • 1/4 கப் எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 பிரியாணி
  • 2 கிராம்பு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 அண்ணாச்சி
  • 2 ஏலக்காய்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா

Equipemnts:

  • 1 ுகக்ஷகுக்கர்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் அரிசியை 2முறை அலசி 40நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. பின்னர் காய்கறிகளை நறுக்கி, தேங்காய்பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து அதனுடன் வீட்டு கரம் மசாலா சேர்த்து பச்சை வாசம் போக கிளறவும்.
  4. பின் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. பின் காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக விடவும்.
  6. பின் கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து வதக்கவும். பின் மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
  7. பச்சை வாசம் போனதும், 3கப் தேங்காய் பால் மற்றும் 1கப் தண்ணீர் ஊற்றி மீடியம் தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  8. கொதித்ததும் அரிசி மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து விடவும்.
  9. இனி சிம்மில் வைத்து மூடி போட்டு, ஒன்றிரண்டு முறை அரிசி உடையாமல் கிளறவும்.
  10. அரிசியுடன் தண்ணீர் வற்றியதும் அரிசியும் தண்ணீரும் சம அளவில் வந்ததும் சிறிய அடுப்பில் தோசைக் கல் வைத்து அதன் மேல் குக்கர் வைத்து மூடி மேலே வெயிட் வைத்து சிம்மில் 20நிமிடங்கள் தம் போடவும்.
  11. இனி வாணலியில் எண்ணெய்‌ சேர்த்து முதலில் முந்திரி வறுத்து, பின் நறுக்கிய ப்ரெட் துண்டுகளை சேர்த்து வறுத்து, சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
  12. அவ்வளவுதான். சுவையான,கல்யாண பிரிஞ்சி சாதம் ரெடி.