மொறு மொறுனு ருசியான அவல் முறுக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: உங்களுக்கு முறுக்கு மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அவல் முறுக்கு இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் பொடித்த அவல்
  • 1 கப் பயத்தம் மாவு
  • 1 கப் பொட்டுக்கடலை மாவு
  • ½ டீஸ்பூன் மிளகு பொடி
  • ½ டீஸ்பூன் பெருங்காயப்பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் எல்லாமாவையும், உப்பு,பெருங்காயப்பொடி, மிளகுப்பொடி நெய் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது ,சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாகப்பிசைந்து கொள்ளவும்.
  2. பிறகு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் , முறுக்கு அச்சில் கொஞ்சம் கொஞ்சமாக மாவைப்போட்டு முருக்குகளாகப்பிழியவும். நன்கு சிவந்து மொறு, மொறுப்பாக வெந்ததும் பொரித்து எடுத்து பரிமாறவும்.