மணமணக்கும் சுவையான கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி ?

Summary: கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாக செய்யப்படும் கும்பகோணம் கடப்பா பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். இதன் சுவை மிகவும் அட்டகாசமாக முறையில் இருக்கும். இந்த கும்பகோணம் கடப்பா இட்லி, தோசைக்கு நாம் வழக்கமாக செய்யும் சாம்பார்க்கு பதிலாக இந்த கடப்பாவை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மணக்மணக்க செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாக மாறிப் போகும். இன்று இந்த ருசியான கும்பகோணம் கடப்பா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

Ingredients:

  • 1 கப் பாசி பருப்பு
  • 4 பச்சை மிளகாய்
  • 1 உருளை கிழங்கு
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • தண்ணீர்
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp பொரிகடலை
  • ½ tbsp கசகசா
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • ½ tbsp சோம்பு
  • 2 பிரியாணி இலை
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • உப்பு
  • 1 tbsp எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு குக்கரில் பாசி பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வறுத்து கொள்ளுங்கள், பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பின் மஞ்சள் பொடி மற்றும் கடைசியாக ஒரு உருளைக்கிழங்கு பாதியாக வெட்டி இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு குக்கரில் நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். பின் குக்கரை இறக்கி பிரஷரை ரிலீஸ் செய்து கொண்டு உள்ளே போட்டிருந்த உருளைக்கிழங்கை எடுத்து தனியாக எடுத்து துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு குக்கரில் உள்ள தண்ணீரை வடிகட்டி பின் பருப்பை நன்றாக மசித்து விட்டுக் கொள்ளுங்கள். பின் வடிகட்டிய தண்ணீரை மீன்டும் இதனுடன் சேர்த்து விடுங்கள். பின் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, பொரிகடலை, கசகசா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் எற்றவும், எண்ணெய் நன்கு காய்ந்ததும். அதில் பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து 20 வினாடிகள் நன்கு வறுக்கவும்.
  5. அதன்பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சிறிது கருவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளியையும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  6. பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் நாம் வேகவைத்த பருப்பையும் இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள், பின் கடப்பா நன்றாக நுரைத்து வரும்பொழுது நாம் அரைத்த தேங்காயையும் சேர்த்துக் கொண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள்.
  7. பின் கடப்பா நன்றாக கொதித்து வந்ததும் நாம் வைத்திருக்கும் எலுமிச்சை பழச்சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கடப்பாவை இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கும்பகோண கடப்பா தயாராகிவிட்டது.