மணத்தக்காளி புளிகுழம்பு செய்வது எப்படி ? இளம் தாய்மார்களுக்கு முக்கியமாக செய்து கொடுங்கள்.

Summary: தினசரி வீட்டில் செய்யும் கத்திரிக்காய் புளிக்குழம்பு, வெண்டைக்காய் புளிக்குழம்பு, முருங்கக்காய் புளிக்குழம்பு, வெங்காய குழம்பு இந்த நான்கு புளிகுழம்பு தான் மாறி மாறி வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறோம். சற்று வித்தியாசமாக மணத்தக்காளி பூண்டு குழம்பு இதை ஒருநாள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்க அனைவருக்கும் பிடித்த ஒரு குழம்பாக இருக்கும். இதில் ஒரு முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஒரு மருத்துவ குணம் உள்ளது புதியதாக பிரசவித்த பெண்கள் இந்த குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலமாக தாய்ப்பால் சுரப்பது அதிகமாக சுரக்கும். இதை முன்பே பிரசவித்த பெண்களுக்கு நம் முன்னோர்கள் அடிக்கடி வீட்டில் செய்து கொடுக்கும் ஒரு உணவாகும். இதை எப்படி செய்வது தேவையான, பொருட்கள், மற்றும் செய்முறைள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம்.

Ingredients:

  • 5 tbsp மணத்தக்காளி வற்றல்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பற்கள் பூண்டு
  • 1 தக்காளி
  • 2 tbsp புளிகுழம்பு மசாலா பொடி
  • புளி
  • உப்பு
  • 5 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp வெந்தயம்
  • 1 tbsp சோம்பு
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பவுள்

Steps:

  1. செய்முறை
  2. குழம்பை தயார் செய்வதற்கு முன்பு ஒரு எலுமிச்சை பழத்தின் அளவு புளி எடுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் விடவும்.
  4. எண்ணெய் காய்ந்தவுடன் தாளிப்பதற்காக வைத்துள்ள கடுகு, வெந்தயம்,சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் அதன் பின்பு வெங்காயத்தையும் போட்டு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் முறை வதக்கிக் கொண்டே இருக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.தக்காளி, பூண்டு பச்சை வாடை போகும் வரையில் வதக்கவும்.
  6. அதன் பின்பு ஊற வைத்துள்ள புளியை கரைத்து ஊத்தவும் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு புளிக்குழம்பு மசாலா பொடி போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குழம்புபை மூடி வைத்துவிடுங்கள்.
  7. மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி மணத்தக்காளி வற்றலை என்னை காய்ந்தவுடன் அதில் போட்டு பொறித்து எடுத்து குழம்பு கொதித்த உடன் அதில் போடவும்.
  8. அதன் பின்பு குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும் இப்போது சுவையான மணத்தக்காளி புளிக்குழம்பு தயார் ஆகிவிட்டது.