மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான உருளைக்கிழங்கு பக்கோடா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Summary: மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு உருளைகிழங்கு பக்கோடா இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கிலோ உருளைக்கிழங்கு
  • 2 கப் அரிசி மாவு
  • ½ கப் தயிர்
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 50 கிராம் வெந்தயக்கீரை
  • 6 பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • எண்னெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கினை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். கீரையை சுத்தம் செய்து சிறியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தயிர், சுத்தம் செய்த கீரை, சர்க்கரை, பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  3. இந்த கலவையுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கினை சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும்.
  4. அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்துவைத்துள்ள கலவையை எண்ணெயில் உதறி உதறி விடவும், மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.