ருசியான தூதுவளை சாதம் காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும், தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். சளி, இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.

Ingredients:

  • 1 கப் தூதுவளை
  • 2 கப் வடித்த சாதம்
  • 3 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 5 பல் பூண்டு
  • 2 வர மிளகாய்
  • புளி
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடலை
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் தூதுவளையை கழுவி வைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்களான மிளகு, சீரகம்,பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து வறுபட்டதும் சுத்தம் செய்த கீரை சேர்த்து வதக்கவும்.
  3. கீரை வதங்கியதும் ஆற விட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  4. மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பூண்டு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும். பின் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
  5. பின் அரைத்த விழுது சேர்த்து கிளறவும். அதனுடன் பெருங்காய தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. தண்ணீர் வற்றி வதங்கியதும் சாதம் சேர்த்து கிளறவும்.
  7. அவ்வளவுதான். மிகவும் சுவையான தூதுவளை சாதம் ரெடி.