மதிய உணவுக்கு ஏற்ற ருசியான சௌ சௌ கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சௌ சௌ கூட்டு இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். சௌ சௌ காய் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கிலோ சௌ சௌ
  • 50 கிராம் கடலை பருப்பு
  • ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு,
  • 1 வர மிளகாய்
  • கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
  • ½ டீஸ்பூன் மல்லி
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 1 பல் பூண்டு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கடலைப்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து கால் டம்பளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  2. அடுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து சௌ சௌ, வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும்.
  4. பருப்பு அரை வேக்காடு வெந்ததும் சௌ சௌ, அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் இறக்கவும்.
  5. பிறகு அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வாசனை வர வதக்கவும்.
  6. பிறகு கலவையை கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  7. அடுப்பில் சிறிய வாணலியை வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி வர மிளகாய் கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு வெடிக்க விட்டு இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போட்டு கூட்டில் ஊற்றி இறுக மூடிவைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்து கிளறி பரிமாறவும்.