காரசாரமாக நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் இப்படி மட்டும் செய்து பாருங்க பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Summary: உங்களுக்கு நாட்டுக்கோழி மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது! நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் இது போன்று ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க,

Ingredients:

  • 500 கிராம் நாட்டுக்கோழி கறி
  • 3 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 100 மில்லி எண்ணெய்
  • 100 கிராம் இஞ்சி சாறு
  • 3 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • கொத்தமல்லி
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கோழி கறியைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
  2. அடுத்து இஞ்சியை தோல் நீக்கி, சாறு பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய் தூள் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
  3. அதனுடன் கோழி கறியையும் போட்டு நன்றாக பிசைந்து பிறகு கறி மசால் பொடியையும் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
  4. பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கலந்துவைத்துள்ள கோழிக் கறியை கொட்டி வதக்கவும்.
  5. கறி பொன்னிறமாக வந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு இறக்கி பரிமாறவும்.