கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?

Summary: இன்று நாம் அரைக்கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் அரைக்கீரையை உணவாக எடுத்துக் கொள்வதுதன் மூலம் நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும் சக்தி அரைக்கீரைக்கு உண்டு மேலும் குடல் புண்கள், நரம்பு தளர்ச்சி, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவை அனைத்தையும் நாம் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதனால் எளிதில் தீர்வு காணலாம். இன்று அரைக்கீரையை பயன்படுத்தி கீரை சாதம் செய்ய இருக்கிறோம். அரைக்கீரையை பயன்படுத்தி தான் கீரை சாதம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்கள் எநத கீரை வேணாலும் பயன்படுத்தி கொள்ளலாம் இன்று நாம் அரைக்கீரை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கட்டு அரைக்கீரை
  • 5 கப் சாதம்
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp நெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 5 முந்திரி பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 ½ tbsp உப்பு
  • ½  tbsp  கரம் மசாலா
  • ½ பழம் எலுமிச்சை சாறு

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் நான்கு பச்சை மிளகாய் கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கட்டு கீரையை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்துவிட்டு இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. சிறிது நேரத்தில் கீரை நன்றாக வதங்கி அதன் அளவு குறைந்து விடும் அதன் பின்பு ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கிளறி விட்டு கீரையை ஒரு பெரிய பவுளில் தனியாக எடுத்து குளிர வைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய கீரையும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து க்கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் மற்றும் முந்திரி பருப்பு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  4. முந்திரி பருப்பு நன்றாக வறுப்பட்டு பொன்னிறமாக வந்ததும் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  5. தக்காளி மென்மையாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி அதன்பின் நாம் அரைத்த கீரையை இவனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு, கரம் மசாலா மற்றும் அரை எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின் கீரை 5 நிமிடம் நன்கு வதங்கியதும் இதனுடன் 5 கப் அளவு சாதம் சேர்த்து அனைத்து சாதத்துடன் கீரை கலக்கும்படி சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் சத்தான அரைக்கீரை சாதம் இனிதே தயாராகிவிட்டது.