அடிக்கிற வெயிலுக்கு இதமா சில்லினு அன்னாசி குலுக்கி சர்பத் இப்படி செய்து பாருங்க! சுவையும் பிரமாதமாக இருக்கும்!

Summary: குலுக்கி சர்பத் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் இந்த நாட்களில் நாம் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், இயற்கை பானமான சர்பத் தினமும் பருகி வரலாம். சர்பத்தில் நன்னாரி சர்பத், எலுமிச்சை சர்பத் என பல வகைகள் உள்ளன. அதில் ‘குலுக்கி சர்பத்’ மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. கோடை காலத்தில், குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீங்கள் சென்றால், பல தெரு உணவு இணைப்புகள் மற்றும் சாலையோர உணவகங்களில் காட்சிக்கு வைக்கப்படும் குலுக்கி சர்பத்தை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.

Ingredients:

  • 2 கப் நறுக்கிய அன்னாசி
  • 1 எலுமிச்சை
  • 1 டீஸ்பூன் சப்ஜா விதை
  • சர்க்கரை
  • 10 புதினா
  • 1/2 சிட்டிகை உப்பு
  • 2 பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 டம்ளர்
  • 1 கண்ணாடி கிளாஸ்

Steps:

  1. சப்ஜா விதைகளை 20 நிமிடங்கள் 1/4கப் நீரில் ஊற விடவும்.
  2. நறுக்கிய அண்ணாச்சி பழத் துண்டுகளை மிக்ஸிக்கு மாற்றி, அதனுடன் புதினா இலைகள், சர்க்கரை, உப்பு சேர்க்கவும்.
  3. பின் 1/2கப் அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
  4. அன்னாச்சி சாறுடன் எலுமிச்சை பிழிந்து அதன் சாறையும் சேர்க்கவும்.
  5. சாறை ஒரு டம்ளருக்கு மாற்றி அதில் சிறிய லெமன் துண்டு, ஏற்கனவே பிழிந்த லெமன் சக்கை மற்றும் விதை நீக்கிய மிளகாய் சேர்க்கவும்.
  6. இந்த டம்ளரை,மற்றொரு டம்ளரால் இடைவெளி இல்லாமல் மூடி நன்றாக கைகளால் குறைந்தது 3 நிமிடங்களுக்கு குலுக்க வேண்டும்.
  7. இவ்வாறு செய்தால், மிளகாய் மற்றும் லெமன் சுவை கலந்து இருக்கும்.
  8. இதனுடன் உடலுக்கு குளிர்ச்சியான சப்ஜா விதைகளை சேர்த்து பருகலாம்.
  9. அவ்வளவுதான். சுவையான அன்னாசி குலுக்கி சர்பத் ரெடி.