சட்டுனு 5 நிமிஷத்துல கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: ஆம்லெட் செய்பவர்கள் முட்டையை ஊற்றி அதில் வெங்காயம், பெப்பர் எல்லாம் போட்டு தோசை கல்லில் எளிதாக போட்டுசாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இங்கு காய்கறிகள் பல வகை சேர்த்து கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் செய்து விடலாம். எல்லாவகையான சாதத்திற்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் எப்படி செய்வது? என்பதைத் தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

Ingredients:

  • 3 மு‌ட்டை
  • 1/4 க‌ப் பா‌ல்
  • 1 தே‌க்கர‌ண்டி கடலை மாவு
  • 1 வெ‌ங்காய‌ம்
  • 1 தலா கேர‌ட், குடை ‌மிளகா‌ய், த‌க்கா‌ளி
  • 2 ப‌ச்சை ‌மிளகா‌ய்
  • உ‌ப்பு
  • ‌மிளகு தூ‌ள்
  • 2 தே‌க்கர‌ண்டி எ‌ண்ணெ‌ய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. மு‌ட்டைகளை உடை‌த்து ‌கி‌ண்ண‌ற்‌றி‌ல் ஊ‌ற்‌றி நுரைபொ‌ங்க அடி‌க்கவு‌ம். அ‌தி‌ல்பா‌ல், கடலை மாவு, உ‌ப்பு, ‌மிளகுதூ‌ள் சே‌ர்‌த்து கல‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.
  2. பொடியாக நறு‌க்‌கிய ப‌ச்சை ‌மிளகா‌ய், வெ‌ங்காய‌ம்,கா‌ய்க‌றிக‌ள், த‌க்கா‌ளிஆ‌கிய‌வ‌ற்றையு‌ம் சே‌ர்‌த்து ந‌ன்கு கல‌க்கவு‌ம்.
  3. தோசை‌க் க‌ல்லை சூடா‌க்‌கி அ‌தி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி, கா‌ய்‌ந்தது‌ம் அ‌தி‌ல் ஒருஆ‌ம்லே‌ட்டு‌க்கு‌த் தேவையான மு‌ட்டை‌க் கலவையை ஊ‌ற்‌றவு‌ம். ஒருபுற‌ம் வெ‌ந்தது‌ம் ‌திரு‌ப்‌பி‌ப்போ‌ட்டு ‌சி‌றிது எ‌ண்ணெ‌‌ய் ‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் எடு‌த்து ‌விடவு‌ம். சுவையான கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் தயார் ,