க்ரிஸ்பியான தோசை காலை உணவுக்கு சுட சுட இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!!

Summary: பெரும்பாலும் ஹோட்டல்களில் தரப்படும் தோசை மொறு மொறுனு இருக்கும். நம் வீட்டில் அது போன்று செய்தால் வராது ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் இது போன்று மாவு அரைத்து தோசை சுட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும். மொறு மொறுனு குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் புழுங்கல் அரிசி
  • ¼ கப் உளுந்து
  • கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • உப்பு

Equipemnts:

  • தோசை கல்

Steps:

  1. முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  2. அடுத்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு பொங்கப் பொங்க அரைத்துக் கொள்ளவும்.
  3. கடைசியில் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிட்டு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
  4. இந்த மாவை உடனடியாக தோசை வார்க்கலாம். ஒரு கரண்டி மாவை எடுத்து மிக மெல்லிய தோசையாக ஊற்றி சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
  5. இந்த மாவை மசாலா தோசைக்கு பயன் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.