செட்டிநாடு ஸ்டைல் ருசியான மாங்காய் வத்தல் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் மாங்காய் வத்தல் குழம்பு இது போன்று செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 8 துண்டு மாங்காய் வத்தல்
  • 12 சுண்டைக்காய் வத்தல்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • வெல்லம்
  • கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் மாங்காய் வத்தலை 15 நிமிடம் சுடுத் தண்ணீரில் ஊற விடவும். தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும்.
  3. ஒரு வாணலியில் கால் கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  4. அடுத்து அத்துடன் சுண்டை வத்தலை போட்டு வதக்கவும். பிறகு
  5. வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும். புளியை கரைத்து ஊற்றி அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
  6. பின்னர் மாங்காய்வத்தல், உப்பு போடவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிந்ததும் வெல்லத்தை போட்டு இறக்கி பரிமாறவும்.