தித்திக்கும் சுவையில் ரதேங்காய் பால் அல்வா செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!!

Summary: தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் ஹல்வா இது போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஹல்வாவை சிறு சிறு உருண்டை மற்றும் மிட்டாய் வடிவத்திலும் செய்து கொடுக்கலாம்.வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ஹல்வா செய்வதென்று கீழே கொடுங்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 தேங்காய்
  • 1¾ கப் பால்
  • 150 கிராம் சீனி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் தேங்காயை பூவாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். சீனியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு, முதலில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.தேங்காயின் வெள்ளை நிற பூவை மட்டும் போட்டு அரைக்கவும்.
  3. அடுத்து தேங்காயை அரைத்ததும் ஒரு பாத்திரத்தில் பிழிந்து வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  4. பிறகு அந்த சக்கையை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து வடிகட்டி, மீண்டும் இதைப் போல அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 1 3/4 கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்
  5. பிறகு ஒரு அடிகனமான வாய் அகன்ற பாத்திரத்தில் தேங்காய் பால், பால், மற்றும் சீனியை சேர்த்து அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.கிளறாமல் விட்டால் பொங்கி வந்து விடும்.
  6. பின்பு தீயை மிதமாக வைத்து பாலை நன்கு 35 நிமிடம் வரை கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் ஹல்வா பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
  7. இப்பொழுது சுவையான தேங்காய் பால் அல்வா தயார்.