ருசியான செட்டிநாடு உப்புக்கறி இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க இதன் சுவை அபாரமாக இருக்கும்!!

Summary: சுவையான செட்டிநாடு உப்புக்கறி இது போன்று ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த கறி செய்து ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 250 கிராம் கறி
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 வர மிளகாய்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • இஞ்சி
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • கருவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், கசகசா, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் அரைத்து கறியில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்கவேண்டும்
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பை தாளிக்கவும்.
  3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பிறகு தக்காளி, கறிவேப்பிலை போட்டு கறிக்கலவை கொட்டி நன்கு கிளற வேண்டும்.வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூட வேண்டும்.
  5. தண்ணீர் வற்றியவுடன் மிளகு தூள் சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.