உணவாகவும் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட ருசியான மிளகு அடை இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க!

Summary: காரசாரமான மிளகு அடை இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த அடை செய்து மாலை நேரத்திலும் ஸ்னாக்ஸ் ஹாக சாப்பிடலாம். இதற்கு உங்களுக்கு பிடித்தமான சட்னி செய்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம் சுவையாக இருக்கும்.எப்படி இந்த அடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

Ingredients:

  • 3 கப் பச்சரிசி
  • 2 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1½ டீஸ்பூன் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • தோசை கல்

Steps:

  1. முதலில் பச்சரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்து வைக்கவும். அடுத்து மிளகினை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  2. சீரகத்தையும் மிளகைப் போலவே மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்துக்கொள்ளவும்.கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
  4. மாவு கட்டியில்லாமல் நன்கு பதமாக கலந்து கொள்ளவும்.
  5. அடுத்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி காய விடவும்.
  6. பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு கையளவிற்கு எடுக்கவும். சூடேறிய தோசைக்கல்லில் மாவை அடைப் போல் தட்டவும். கையினால் அழுத்தி விட்டு சற்று பெரிய அடை போல் பரப்பவும்
  7. மிகவும்மெல்லியதாக இருக்கக் கூடாது. சற்று கனமான அடையாக தட்டவும்.
  8. அடை லேசாக வெந்ததும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் வேகவிடவும்.
  9. பிறகு அடையைத் திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய்யை மேலே விட்டு வேகவிடவும். சற்று நிறம் மாறி இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும்.
  10. இப்பொழுது சுவையான மிளகு அடை தயார்.