ஹோட்டல் ருசியில் ருமாலி ரொட்டி இப்படி ஒரு முறை வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!

Summary: எப்பொழுதும் ஒரே மரியானா ரொட்டி செய்யாமல் இது போன்று வித்தியாசமாக ருமாலி ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரொட்டி செய்து அதனுடன் சன்ன மசாலா வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ கிலோ மைதா மாவு
  • ½ கப் பால்
  • ¼ டீஸ்பூன் சமையல் சோடா
  • 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் மைதா, சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும். பாலை வெதுவெதுப்பாக்கி மாவில் சேர்த்து மிருதுவாக பிசையவும்.போதவில்லை யெனில் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
  2. அடுத்து கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி ஈரத்துணியால் மூடி பிரிஜ்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
  3. பிறகு எடுத்து உருண்டைகளில் குழி செய்து சிறிது எண்ணெய் விட்டு மூடி திரும்ப பிரிஜ்ஜில் வைக்கவும்.(குறைந்தது ஒருமணி நேரம்)
  4. அடுத்து ஒரு பெரிய வாணலியை நன்கு அடியில் தேய்து கழுவி விட்டு, அடுப்பில் குப்புற சூடு செய்யவும்.(அடி மேல் பக்கம் இருப்பது போல்)
  5. பிறகு உருட்டு வைத்த உருண்டைகளை மிக மெல்லியதாக தேய்த்து, வாணலி மேல் போட்டு நன்கு சுட்டதும் எடுத்து நான்காக மடித்து, சூடாக பரிமாறவும்.