ருசியான குடைமிளகாய் உருளைகிழங்கு கிரேவி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் கிரேவி மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் என்று இங்கு காண இருப்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி. உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி நாம் வழக்கமாக செய்து உண்ணும் கிரேவிகலுக்கு ஒரு அருமையான மாற்று.

Ingredients:

  • 2 உருளைக்கிழங்கு
  • 1 குடைமிளகாய்
  • 5 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை பொடிதாக அறிந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. பிறகு உருளைக்கிழங்கு, குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. அவை வதங்கியதும் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா போட்டு நன்றாக கலக்கி 15நிமிடம் மூடி வேக வைக்கவும்.
  5. பின்னர் சிறிதளவு தண்ணீர் விட்டு கிளறி 5 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
  6. தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைத்து விட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
  7. இது சப்பாத்தி, பூரி இவற்றுடன் உண்ணலாம். விரத நாட்களில் பயனுள்ளதாக இருக்கும்.