காரசாரமான மசாலா முட்டை வறுவல் செய்வது எப்படி ?

Summary: இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இன்று மசாலா முட்டை வறுவல் பற்றிதான் பார்க்க போகிறோம் இந்த முறையில் மசாலா முட்டை வறுவல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். அதனால் மசாலா முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1  tbsp எண்ணெய்
  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் துள்
  • 1 tbsp மல்லித் தூள்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • 1 சிட்டிகை கரம் மசாலா
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  2. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி அதன்பின் இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி எடுங்கள். அதன்பின் இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து கிளறி விடவும்.
  3. அதன் பின் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும் பின்பு அரை கப் தண்ணீர் சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கி மசாலா கொதித்து வரும் பொழுது இதனுடன் சிறிது நறுக்கிய கொத்தமல்லியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்..
  4. பின் தண்ணீர் வற்றிய பிறகு நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள் பின் முட்டைக்கு தேவையான அளவு சிறிதளவு உப்பு மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
  5. பின் ஒரு ஒரு நிமிடம் முட்டையை கிளறாமல் அப்படியே வேகவிடுங்கள் அதன் பின்பு முட்டையை கிளறிவிட்டு வதக்கினால் பெரிய பெரிய முட்டையை துண்டுகளாக வரும் அவ்வளவுதான் மசாலா முட்டை வறுவல் இனிதே தயாராகி விட்டது.