தாருமாறான ருசியில் ஸ்டஃப்டு பெல் பெப்பர் ரெசிபி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்க்க மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஸ்டஃப்டு கேப்சிகம் பிரபலமான உணவு ரெசிபி இது உலகம் முழுவதும் செய்யப்படுகின்றன. அடைத்த கேப்சிகம் ரெசிபி பர்வா சிம்லா, மிர்ச் ரெசிபி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பஞ்சாபி பாணி சுவையான பர்வா சிம்லா மிர்ச் தயாரிப்பாகும், இதில் கேப்சிகம் மசாலா மசித்த உருளைக்கிழங்குடன் நிரப்பப்பட்டு பின்னர் மேலும் சமைக்கப்படுகிறது. எந்த வட இந்திய உணவுக்கும் இது ஒரு ஆறுதலான சைட் டிஷ் ஆகும்.

Ingredients:

  • 4 குடைமிளகாய்
  • 1/4 கப் அரிசி
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கரம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 கப் மெஸரெல்லா சீஸ்
  • 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  • 1 டீஸ்பூன் இடாலியன் சீசன்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 ஓவன்
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கரம் மசாலா சேர்த்து நறுக்கிய தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. அவை நன்கு வதங்கியதும் அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து 1/4 கப் அரிசி சேர்த்து நன்கு கலந்து 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.
  3. குடைமிளகாய் மேல் பகுதியை நீக்கி விதைகள் அகற்றி வைத்துக் கொண்டு, சாதம் கலவை வெந்ததும் அதில் நிரப்பி 30 நிமிடங்கள் 200° அவன் பேக் செய்யவும்.
  4. பிறகு அதில் சீஸ் தூவி சீசன், சில்லி ப்லெக்ஸ் மற்றும் சிரிய தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  5. சுவையான ஸ்டஃப்டு பெல் பெப்பர் தயார். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.