மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான ஆப்பிள் பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: தமிழர்கள் காலை உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பது போல மாலை நேர டிபனும் அவர்களின் வாழ்வியலுடன் கலந்து விட்டது. ஒரு சில நகரங்களில் மாலை நேர டிபன் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதிகப்பட்சமாக வடை, சமோசா, பஜ்ஜி இதை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் காரைக்குடி, கோயம்புத்தூர், திருச்சி பக்கம் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் மாலை நேர டிபன் தயார் செய்யப்படும். ஒரு 5 மணிபோல் சரியாக, டீ குடிப்பதற்கு முன்பு சுடசுட பணியாரம் மாலை நேர டிபனில் இடம்பெறும்.

Ingredients:

  • 2 ஆப்பிள்
  • 2 கப் பச்சரிசி
  • 1 கப் பொடித்த வெல்லம்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  • நெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 பணியார கல்

Steps:

  1. ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து நறுக்கிய ஆப்பிள் துண்டுகளைப் போட்டு பத்து நிமிடம் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  3. பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு மையாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அத்தோடு பொடித்த வெல்லம் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  5. அரைத்த மாவில் வேக வைத்து மசித்த ஆப்பிள் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
  6. இப்பொழுது பணியாரக் கல்லில் நெய் ஊற்றி சிறிது சிறிதாக மாவை ஊற்றி பணியாரம் வார்த்து எடுக்கவும்.
  7. அவ்வளவுதான் சுவையான ஆப்பிள் பணியாரம் தயார்.