குக் வித் கோமாளியில் VJ விஷால் செய்த ருசியான பாம்பே ஐஸ் ஹல்வா இப்படி செய்து பாருங்க!

Summary: அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. பாம்பே ஐஸ் ஹல்வா மும்பையில் உருவானது. ஐஸ் ஹல்வா அதன் நிறம் மற்றும் அமைப்பு காரணமாக அதன் பெயரைப் பெற்றது. இது பனிக்கட்டி போல் வெண்மையானது, மிகவும் குளிர்ச்சியானது மற்றும் வாயில் வைத்தவுடன் உருகும் தன்மையுடையது. இது பாதாம் மற்றும் குங்குமப்பூவை முதலிடமாக செய்யப்படுகிற மிகவும் பணக்கார மற்றும் சுவையான இனிப்பு வகை. பாம்பே ஐஸ் ஹல்வா ஒரு தனித்துவமான அமைப்பு மற்றும் சுவையுடன் சதுர வடிவில் மெல்லிய தாள் போன்று செய்யப்பட்டு வருகிறது.

Ingredients:

  • 1 கப் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளார்
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • 6 நறுக்கிய பாதாம், பிஸ்தா
  • 2 பட்டர் பேப்பர்
  • 1 டீஸ்பூன் புட் கலர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் காய்ச்சிய பால், சர்க்கரை, சோள மாவு மற்றும் நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  2. அந்த கலவை சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது புட் கலர் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சிறிது கெட்டியான பக்குவம் வரும் போது அதில் இரண்டாம் முறை நெய் சேர்த்து கலந்து விடவும்.
  3. இப்போது அல்வா பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் ஆற விடவும்.
  4. பின்னர் 2 பட்டர் பேப்பர்களில் நெய் தடவிக் கொள்ளவும். அதில் ஒரு பட்டர் பேப்பரில் தயாரித்து வைத்துள்ள அல்வாவை ஊற்றி மற்றொரு பட்டர் பேப்பரால் மூடிக்கொள்ளவும்.
  5. ஒரு சப்பாத்தி கட்டையால் மெதுவாக பரத்தி விடவும். மிகவும் மெலிதாக பரத்தவும்.
  6. இப்போது மேலே வைத்து முடிய பட்டர் பேப்பரை எடுத்து விடவும். பின் அல்வா மீது நறுக்கிய டிரை ப்ரூட்ஸ் தூவவும்.
  7. இப்போது கீழே வைத்துள்ள பட்டர் பேப்பருடன் மெதுவாக அல்வாவை எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.
  8. பின்னர் வெளியே எடுத்து பரிமாறும் நேரத்தில் கத்தி வைத்து சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சுவையான ஐஸ் அல்வா தயார்.