ருசியான இட்லி சாம்பார் இனி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Summary: கிராமத்து இட்லி கடைகளில் சுட சுட இட்லி, அதற்கு கொடுக்கப்படும் சாம்பார் சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் அதே சுவையில் எப்படி சாம்பார் வைப்பது என்று தான் இன்று பார்க்க போகிறோம்.தினமும் காலையில் இட்லி, தோசை, செய்யும் போது ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி சாம்பார் வைத்து பாருங்க அப்புறம் இட்லியும் காலியாகி விடும், சாம்பாரும் காலியாகி விடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும் இந்த சாம்பார். இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 5 பச்சைமிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கெட்டி பெருங்காயம்
  • 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 3 ஸ்பூன் கடலைமாவு
  • எண்ணை
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் குக்கரில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள் போடி, பெருங்காயம், சேர்த்து 1½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விட்டு 3 விசில் வரை விட்டு எடுத்துக்கவும்.
  2. ப்ரெஷர் போனதும் குக்கரை திறந்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், நன்கு பொரிந்ததும், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்தபிறகு குக்கரில் மசித்து வைத்த கலவையை இதில் ஊற்றவேண்டும்.
  4. பிறகு அதில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சாம்பார் போடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. ஒரு கொதி வந்ததும் ஒரு கப்பில் கடலை மாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து சாம்பாரில் ஊற்றவும்.
  6. பிறகு நன்கு கலந்து விடவும் பிறகு 5 நிமிடம் கொதிக்கவிடவும். கட்டி பெருங்காயம் இல்லை எல்லாம் இப்போ பெருங்காய பொடியை சேர்க்கலாம். அடுத்து நறுக்கிய கொத்தமல்லி இழைகளை தூவி இறக்கவும்.
  7. இப்பொழுது சுவையான இட்லி சாம்பார் தயார்.